அரசாங்கம் மக்களை பாதுகாக்கத் தவறியுள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மக்களை நுளம்புகளிடமிருந்து கூட காப்பாற்றத் தவறியுள்ளதாகவும் தங்களது பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கதத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தீர்வுத்துக்கொள்ள முடியாத அரசாங்கத்தினால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் ஜே.வி.பியினாலேயே மக்களின் பிரச்சினைளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.