ஐல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடாக இருந்தாலும் அது மிருகவதை.எனவே அதனை ஏற்கமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இன்றைய தினம் இடம்பெற பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரி வித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தமிழர்களின் ஆரம்பகால பண்பாடாகிய உடன்கட்டை ஏறுதல், சிறுவயது திருமணம் ஆகியவற்றை நாம் தற்போது கடை ப்பிடிப்பதில்லை. தமிழர்களின் பண்பாடாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அதே போல தான் ஐல்லி க்க ட்டையும் ஏற்கமுடியாது.
நான் மாட்டுவண்டிச் சவாரியை கூட நிறுத்தி இருந்தேன். மாடுகளுக்கு மதுவை பருக்கி ஊசியால் குததுவார்கள். எனவும் தெரிவித்தார்.