அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் : மகிந்த

எப்படியான பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ, ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய தான் அரசியலில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தாலும் எந்த இலாப நோக்கமும் இன்றி தன்னுடன் இருக்கும் இலட்சக்கண க்கான மக்களின் கோரிக்கைகளை எந்த வகையிலும் புறந்தள்ளப் போவதில்லை எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து ள்ளார்.
பலமிக்க வெளிநாடு ஒன்றின் தூதரகமும், அயல் நாடு ஒன்றின் புலனாய்வுப் பிரிவும், முன்னாள் ஜனாதிபதியை செயற்பா ட்டு ரீதியான அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்த மை குறிப்பிடத்தக்கது.