வெறிநாய் கடித்த மாடுகளின் பாலைக் குடித்த 80 பேருக்கு வாந்தி: மும்பையில் பரபரப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்றிரவு திடீரென சுமார் 80 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இரண்டு மாடுகளில் இருந்து கிடைத்த பாலை குடித்தவர்களுக்குதான் வாந்தி, குமட்டல் ஏற்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த மாடுகளை கண்டுபிடித்து பரிசோதித்தனர். அப்போது அந்த இரண்டு மாடுகளையும் வெறி நாய் கடித்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்த மாடுகளுக்கு வெறிநாய் கடிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சுகாதாரம் மற்றும் விலங்குகள் நலத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறும்போது ‘‘இந்த வெறிநாய் மனிதனை கடித்திருந்ததால் மோசமான விளைவுகளை ஏற்படுத்திருக்கும்’’ என்றனர்.

வெறிநாய் கடித்த மாட்டின் பாலை குடித்த 80 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.