இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று பகல்
இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ராய்(65), பெய்ஸ்டோவ்(56), மோர்கன்(43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா(3), ஜடேஜா(2) விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இறுதிவரை போராடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேதர் யாதவ்(90), ஹர்திக் பாண்டியா(56), விராட் கோலி(55) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணியில் டேவிட் வில்லி 5 விக்கெட்டுகளை சாய்த்து அந்த அணியின் வெற்றி வித்திட்டார்.
போட்டியில் தோல்வி அடைந்த போதிலும் இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கேதர் யாதவ் தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளது.