நுரையீரல் குழாய்களினுள் ஏற்படுத்தப்படும் அழுத்தம் காரணமாக உணரப்படும் இழுப்பு போன்ற நோயே இந்த ஆஸ்துமாவாகும்.
இந்நோயினால் சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.
சூழல் காலநிலை மாற்றங்களும் இந் நோய்த்தாக்கத்தின் வீரியத்தில் பங்குவகிக்கின்றன.
உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து வருட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் இளம் வயதினரில் மூன்றில் ஒரு பங்கினர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் ஓட்டோவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இவர்கள் கனடாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 613 ஆஸ்துமா நோயாளிகளை ஆராய்ந்த போது அவர்களில் அனேகமானவர்கள் இளம் வயதினர்களாகவே காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களில் 410 பேர் ஆஸ்துமா பாதிப்புக்குள்ளானவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 203 பேர் ஆஸ்துமா நோய்க்கான குணம் குறிகளை நீண்ட காலத்திற்கு கொண்டிராதவர்களாகவும் காணப்பட்டுள்ளனர்.