மைத்திரியுடன் இணைந்து செயற்பட முடியாது : மஹிந்த ராஜபக்ஸ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கியப்படுத்துவதற்கு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுமாறு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்தவிடம் கோரியுள்ளனர்.

நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர்களுடன் இடம்பெற்ற  சந்திப்பின்  போது விடுக்கப்பட்ட இந்தக்கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண முதலமைச்சர்கள் தவிர்ந்த ஏனைய மாகாண முதலமைச்சர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.