இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிட்ஸர்லாந்தில் இருந்து திரும்பிய பின்னரே ரணில் விக்கிரமசிங்க, மைத்திரியை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது பொருளாதார அபிவிருத்தி மற்றும் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாகாண முதலமைச்சர்கள், சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.