புகைப்பிடித்தல் காரணமாக ஒரு வினாடிக்கு மூன்று பேர் வீதம் இலங்கையில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், புகைப்பிடித்தல் காரணமான நோய்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு சிகிச்சைகளுக்காக ஆண்டு தோறும் 72 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி உனவட்டுனவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வருகை தந்த பின்னர் அரசாங்க வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 55 வீதம் வரை அதிகரித்துள்ளது. அரசாங்க வைத்தியசாலையில் உச்ச அளவில் இலவச சுகாதார சேவை நடைமுறையில் இருக்கின்றன.
இதேவேளை, புகைப்பிடித்தல் காரணமாக ஒரு வினாடிக்கு மூன்று பேர் வீதம் இலங்கையில் உயிரிழக்கின்றனர். அரசாங்க வருமானத்தில் 72 பில்லியன் ரூபா புகைப்பிடித்தல் காரணமாக நோய்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவே செலவிடப்படுகின்றது.
புகைப்பிடித்தல் பழக்கத்தைக் குறைப்பதற்கென அரசாங்கம் ஒழுங்குமுறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. இதன் கீழ் புகையிலைக்கான வரியை 90 வீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.