நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணுவம் பல்வேறு கட்ட பதில் தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரான் பகுதியில் அகதிகள் முகாம் மீது கடந்த ஜனவரி 17-ம் தேதி அந்நாட்டு ராணுவ விமானப் படையை சேர்ந்த ஜெட் விமானம் தவறுதலாக குண்டு வீச்சை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தனர்.
தாக்குதலுக்கு ஆளானவர்களில் முகாமில் சேவை செய்து கொண்டிருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் நல உதவியாளர்களும் பலர் அடங்குவர்.
இந்நிலையில், அகதிகள் முகாம் மீது தவறுதலாக நடத்தப்பட்ட இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 236-ஆக உயர்ந்துள்ளது.
இதில் சம்பவம் நடைபெற்ற ரான் முகாமிலேயே 234 பேரும் உயிரிழந்தனர். மீதமுள்ள இரண்டு பேர் அருகில் உள்ள மாய்துகுரி மருத்துவ முகாமில் இறந்தனர்.