புத்த துறவி கலகொட அத்தே ஞானசார தேரரின் முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பில் காணொளிப்பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பொலிஸ் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து சிங்கள மொழியில் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் கடமையில் இருந்த போது அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தி,தெற்கு அதிவேகப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டுள்ளார்.
இந்த அத்துமீறிய செயல் தொடர்பில் ஞானசார தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகளுக்கு எதிராக ஹோமாகம பொலிஸார் நேற்றைய தினம் குற்றப் பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஹோமாகம நீதவான் நீதிமன்றிலேயே இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, துறவிகள் முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளமை காணொளிப்பதிவு மூலம் வெளியாகியுள்ளது.