மத்திய வங்கியின் பிணை முறி விநியோகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த கோப் குழு அறிக்கையின் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, நற்பெயருக்கு கலங்கம் ஏற்படும் வகையில் விவாதத்தை நடத்த வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.
நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தபட மாட்டாது, எனினும் திருடனுக்கு திருடன் என்று கூறவேண்டி நிலை ஏற்படும் என இதற்கு பதில் வழங்கிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்க மோசடிகாரர்களால் முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இதனால் முறிவிநியோகம் சம்பவம் குறித்த விசாரணையை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்திற்கும் கீழ் கொண்டு வருமாறு அநுரகுமார திஸாநாயக்க இதன்போது கோரியுள்ளார்.
இதேவேளை, டக்லஸ் தேவானந்தா தற்போது பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது போன்ற பல்வோறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.