ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓயப் போவதில்லை அதற்காக உயிரை துறக்கவும் தயாராக இருக்கின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற பினைமுறிமோசடி தொடர்பிலான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.
கடந்த ஆட்சி காலத்தில் அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் விமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு அனுமதியுடன் வருகைத் தந்து விவாத உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கியில் கோடிக்கணக்கான பணத்தினை கொள்ளையிட்டுள்ளது, இதற்கு நல்லாட்சியே முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆனால் அவற்றினை மூடி மறைத்து வருகின்றது. ரணில் விக்ரமசிங்கவிற்கும் இதற்கு தொடர்பு உண்டு, ஆனால் அரசு அவற்றை கண்டு கொள்ளவில்லை.
எவ்வாறாயினும் இந்த முறைகேடான ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் விடமாட்டோம். ஆயிரம் சிறைச்சாலைகளில் அடைத்தாலும் நான் ஓயப்போவதில்லை.
அதேபோல ஆட்சியை கவிழ்ப்பதற்காக நான் என் உயிரை வேண்டுமானாலும் மாய்த்துக் கொள்ள தயாராக இருக்கின்றேன் எனவும் விமல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.