மஹிந்தவை அரசியலில் இருந்து நீக்குவதற்கு இந்தியாவின் “றோ” அமைப்பு விடுத்துள்ள அழுத்தத்திற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜாதிக ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
இந்தியாவின் றோ அமைப்பு விடுத்துள்ள இந்த அழுத்தத்தை நிராகரித்தமையால் மஹிந்த ராஜபக்ஸவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
மஹிந்த தொடர்ந்து அரசியலில் இருப்பதே அரசுக்கு உள்ள பாரிய சவாலாகும். அரசாங்கம் எதிர்பார்க்காத ஒன்றை மஹிந்த செய்துள்ளார்.
இதை கவனத்தில் எடுத்து “மஹிந்த அரசியலில் இருந்து விலகினால் தமது வாரிசுகள் மீதுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும்” என இந்தியாவின் றோ அமைப்பு அழுத்தத்தை பிரயோகித்தது.
எனினும் மஹிந்த இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் அவரின் உயிருக்கு பாரிய ஆபத்து உள்ளது. இந்த அழுத்தத்திற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனாதிபதி என்று கூட பார்க்காமல் ஜோன் கெனடியை அமெரிக்காவின் சி.ஐ.ஏ அமைப்பு கொலை செய்தது என்பதையும் இதன்போது உதய கம்மன்பில நினைவுப்படுத்தியுள்ளார்.
இதனால் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மஹிந்தவின் உயிரை தவிற வேறு எதுவும் இல்லை எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்