யாசகத்திற்கும் 5000 ரூபா அபராத தொகை..?

நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் பெறுவது தடை என தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான தண்டனை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன தவறுகள் தொடர்பில் அபராத தொகை பெறப்படுகின்ற பொழுது, யாசகம் பெறும் நபர்களுக்கு 5000 ரூபாய் தடை விதிக்கும் யோசனையொன்றை போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான அதிகாரசபை தலைவர்களிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.