இலங்கை வளிமண்டலத்தில் ஏற்பட்ட தீடீர் அலை! அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

இலங்கை வான்பரப்பில் அலை வடிவான வளிமண்டல குழப்பத்தின் தாக்கம் குறித்து வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக வளிமண்டல இயல்பு நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் அநேகமான பகுதிகளில் காற்றுடனான காலநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது.

இடிமின்னலும் அதிகமாக காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டவியல் திணைக்களம் கேட்டுள்ளது.