நம் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது காய்கறிகள் மற்றும் பழங்களே.
பச்சை காய்கறிகள் மற்றும் சத்துமிக்க பழங்களை அடிக்கடி எடுத்துக் கொண்டால் மட்டுமே நோய்கள் அண்டாமல் மகிழ்ச்சியாக வாழலாம்.
இவைகள் நமது ரத்தத்தில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரித்து, எவ்வித நோய்களும் நமது உடலைத் தாக்காமல் பாதுகாக்கச் செய்கிறது.
அந்த வகையில் புற்றுநோயை மூன்றே வாரத்தில் குணப்படுத்தும் அற்புதமான காய்கறி சாலட்டை செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பசலைக்கீரை – 1 கப்
- அவகேடோ பழம் – 1/2 கப்
- தக்காளி – 1/3 கப்
- ப்ளாக்பெர்ரி – 1/3 கப்
- மாதுளை – 1/3 கப்
செய்முறை
முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் பசலைக்கீரை, அவகோடா பழம், தக்காளி, ப்ளாக்பெர்ரி மற்றும் மாதுளை போன்ற காய்கறி பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை 1 டேபிள் ஸ்பூன் அவகேடோ எண்ணெய், 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு கல் உப்பு மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக குலுக்க வேண்டும்.
இப்போது ஆரோக்கியமான சுவையான காய்கறி சாலட் தயார். இந்த சாலட்டை வாரத்திற்கு மூன்று முறைகள் தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும்.
நன்மைகள்
- பசலைக்கீரையில் குறைவான கலோரி மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இது நமது ரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, அதில் உள்ள குளோரோஃபில் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. மேலும் ரத்த அழுத்தம் குறைத்து எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- அவகேடோ பழத்தில் நல்ல கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. அதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனால் இது நமது கொலஸ்ட்ரால் அளவு சீராக்கி, கண் பார்வை, மூளையின் ஆரோக்கியம், குடலியக்கம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- மாதுளை பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-வைரல் மற்றும் கட்டிகளைக் கரைக்கும் பண்புகள் உள்ளது. ஆகவே இப்பழத்தை சாப்பிட்டால், ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டு, வயிற்று பிரச்சனை, சர்க்கரை நோய், புற்றுநோய், தொண்டைப் புண் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.