ஆட்சியாளர்களுக்கு மஹிந்தவின் முக்கிய அறிவிப்பு!

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதனை அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டியிலுள்ள அபயராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் அரசாங்கத் தரப்பிலிருந்து பங்கேற்கவுள்ளவர்களின் எண்ணிக்கை ஆச்சரியமளிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் கூட்டம் வரலாற்று முக்கியத்துவமான ஒன்று எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போது விமல் வீரவன்ச சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 03 மாதம் வரை அவருக்கு பிணை வழங்குவதில்லை என்று ஒரு அமைச்சர் கூறியிருப்பதாகவும், இதன் மூலம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது நீதிமன்றத்தாலா அல்லது அமைச்சர்களாலா என்று தெளிவாகின்றது என்றும் அவர் இதன் போது கூறியுள்ளார்.

இதேபோன்று, கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்களின் பிள்ளைகளும் சிறை செல்ல வேண்டி ஏற்படும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று பகிரங்கமாக கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் கஷ்டப்படுவது பிரச்சினையில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் பிள்ளைகள் கஷ்டப்படக் கூடாது என்பதால் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருந்தவர்களை பங்கேற்க வேண்டாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அனைத்து போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்வதாகவும் கூறியுள்ளார். எது எப்படி இருப்பினும் ஆட்சியை கைப்பற்றுவேன் என சூழுரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை நிறைவேற்ற தனது உச்சகட்ட பலத்தை காட்டுவார் என்றும் கூறப்படுகின்றது.