ஆபிரிக்காவில் இருந்து இந்தோனேஷியா வரையில் ஏற்படவுள்ள இலங்கையின் மாற்றம்!

தென் ஆபிரிக்காவில் இருந்து இந்தோனேஷியா வரையில் பிரதான பொருளாதார மத்திய நிலையமாக இலங்கையை மாற்ற திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலகின் வேகமாக பொருளாதார அபிவிருத்தியை கைப்பற்றும் நாடாக இலங்கை கருதப்படுகின்றமையினால் அதனை முழுமையான பயனை பெற வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பல வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

18 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர்கள் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்கள் கடந்த காலம் முழுவதும் இலங்கைக்கு பாரிய அந்நிய செலாவாணிகளை கொண்டு வந்துள்ளார்கள். அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.