அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல்!

அவன் கார்ட் கப்பலின் கப்டன் உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோதமான முறையில் தம்மை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அவன்ட் கார்ட் கப்பலின் கப்டன் உக்ரேய்னிய பிரஜையான கெனாதி கஜிரிலொச் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 5ம் திகதி கடற்படையினர் தம்மை கைது செய்த, அதற்கு முன்னர் தமக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமானதும், மனிதாபிமானமற்ற ரீதியிலும் தம்மை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக் கடற்பரப்பிற்கு வெளியே வைத்து தம்மை கைது செய்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, ரக்னா லங்கா நிறுவன பிரதானிகள், பாதுகாப்பு அமைச்சு, அவன்ட் கார்ட் நிறுவனம், இலங்கை கப்பல் நிறுவனம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

49 வயதான இந்த உக்ரேய்னிய பிரஜையான கப்பல் கப்டன் ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்படத்தக்கது.

குறித்த உக்ரேய்ன் பிரஜை காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.