ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் ஒரு சில புலனாய்வு அதிகாரிகள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது சி.ஐ.டி.இனர் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்கின்றதுடன். கடந்த அரசாங்கம், இராணுவத்தை சேர்ந்த ஒரு சில சிறந்த அதிகாரிகளை தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும், விசாரணைகள் பூர்த்தியானதுடன் படுகொலையுடன் தொடர்புபட்டவர்களை அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவாண் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.