பிணை முறி மோசடியில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருப்பதில் பயனில்லை என்று கூட்டு எதிர் கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு பாரபட்சம் பாராது தண்டனை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
இதுபோன்ற, மோசடியில் ஈடுபட்டவர்கள் தற்போது புதிய பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்ககள் வெளியாகியுள்ளன. இந்தப் பத்திரிகைக்கு பிணை முறி என பெயரிட்டால் சிறப்பாக இருக்கும்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காத்திரமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என தாங்கள் கேட்டுக்கொள்வதாக கூட்டு எதிர் கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.