ஜல்லிக்கட்டு தொடர்பாக கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை வாபஸ் பெற்றுக்கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது. இதேபோல் 2016-ம் ஆண்டு கலாசார நிகழ்வாக ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இரண்டு அறிக்கையும் திரும்ப பெறுவதாக உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு நாளை மனுதாக்கல் செய்யவிருக்கிறது.
ஜல்லிக்கட்டின் இந்த நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை எதுவும் வராது என கூறப்படுகிறது.