ஐந்து மாத கர்ப்பிணியின் வயிற்றில் பொலிஸ் எட்டி உதைத்ததை, நான் பார்த்தேன் என போராட்டத்தில் கலந்துகொண்ட திருநங்கை கிரேஸ் பானு கூறியுள்ளார்.
மெரினாவில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொலிசார் உள்ளே புகுந்த தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில், பொதுமக்கள் மற்றும் பொலிசார் ஆகிய இரு தரப்பினருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போராட்டத்துக்குள் புகுந்த பொலிசார் நடத்திய தாக்குதல் குறித்து திருநங்கை கிரேஸ் கூறியதாவது, எங்களுக்கு தேவையான அவகாசத்தைக் கொடுங்கள் என்று திரும்ப திரும்ப கேட்டோம். தாக்குதல் அதிகமானதும், கூட்டத்தினர் தேசிய கீதம் பாடினார்கள்.
அப்படியிருந்தும் பொலிசார், தாக்குதலை நிறுத்தவில்லை. ஐந்து மாத கர்ப்பிணியின் வயிற்றில் ஒரு பொலிஸ் எட்டி உதைத்தார். அந்தப் பெண் அலறிக்கொண்டே சுருண்டு விழுந்தாள்.
நிச்சயம் அவளின் கரு கலைந்திருக்கும். எல்லோருக்கும் சாரமாரியாக அடிகள் விழுந்தன. எனது தலைமுடியை தரதரவென இழுத்து சென்றனர், எவ்வளவு கதறியும் விடவில்லை.
அதன்பின்னர் மயக்க நிலைக்கு சென்ற நான், ஒரு வழியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். பொலிசார் என்னை தாக்கியதால் எனது கழுத்து பயங்கரமாக வலிக்கிறது என கூறியுள்ளார்.