ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா இந்தியா விலங்குகள் நல வாரிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக 2016ல்வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெறுவதற்கான மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கையை திரும்பப்பெறும் மத்திய அரசின் மனுவுக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா இந்தியா உள்ளிட்ட விலங்குகள் நல வாரிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 1ம் திகதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.