பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசினார் அதிபர் டிரம்ப்!!

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த உரையாடல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு அவர் பேசும் 5-வது வெளிநாட்டு தலைவர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.
பதவியேற்ற மறுநாள் (ஜனவரி 21) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்யூ மற்றும் மெக்ஸிகன் அதிபர் பெனா நீட்டோவுடன்  தொலைபேசியில் பேசினார். ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அதனைத் தொடர்ந்து நேற்று முன்பு எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை டிரம்பு தொடர்பு கொண்டு பேசினார்.
முன்னதாக, நியூ ஜெர்ஸி பகுதியில் இந்திய வாழ் அமெரிக்கர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் தன்னுடைய ஆட்சியில் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், பிரதமர் நரேந்திர மோடியுன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று கூறினார்.