பிரேசில் நாட்டில் 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓட்டம்!

பிரேசில் நாட்டில் சாவ் பாலோ மாகாணத்தில் பாயுரு என்ற இடத்தில் திறந்த வெளி சிறை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக மாறியது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 152 கைதிகள் சிறையில் இருந்து தப்பி விட்டனர். தகவல் அறிந்ததும் ராணுவ போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதலுக் கிடையில் 90 பேரை போலீசார் பிடித்தனர். மீதம் 62 பேர் மட்டுமே தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.