என்னை வர சொல்லுகின்றார்கள் நான் போக வில்லை! ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தர இருந்தார்கள் நான் வாங்கவில்லை..!!

என்னை வர சொல்லுகின்றார்கள் நான் போக வில்லை. ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தர இருந்தார்கள் நான் வாங்க வில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நல்லாட்சி அரசு செய்யும் சில வெற்றியான விடயங்களை வைத்து கூறிவருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 27 ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இந்த வாசகத்தை மகிந்த காட்சி படுத்தி கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ஆகியோரையே கைது செய்ய வேண்டும் என விமல் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டது சாதாரண குற்றத்திற்காக அல்ல எனவும் இவர் 40 அரச வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவங்ச தனது தனிப்பட்ட தேவைகளுக்காக அரச காணிகளையும் முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளார். இதனால் தான் இன்று சிறையில் உள்ளார்.

நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டத்தை தடுப்பதற்கான முயற்சி இது இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அரசாங்கத்திற்கு மிக முக்கியமான ஒன்று எனவும் இது கொண்டு வரப்பட்டால் நல்லாட்சி அரசு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மகிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இதனை தடை செய்தமைக்கு பல முக்கிய காரணிகள் உண்டு.

நல்லாட்சி, திறைசேரி அபிவிருத்தி, ஊடக சுதந்திரம் இவை மூன்றும் கடந்த ஆட்சிக்கு பிடிக்க வில்லை.

நல்லாட்சியின் மூலம் ஆட்களை கடத்த முடியாது. திறைசேரி அபிவிருத்தி இடம்பெற்றால் மகிந்தவினால் இலஞ்ச ஊழல் மேற்கொள்ள முடியது.

ஊடக சுதந்திரத்தின் மூலம் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட போன்ற ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற சம்பவங்கள் நடைபெறாது.

இதனால்தான் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ராஜபக்ஸ அரசு எற்றுக்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.