விசுவநாதன் ருத்ரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு எந்தநாடும் அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இயங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அமெரிக்கா கூடஅங்கீகாரம் வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டதால்,விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய எந்த குழுவிற்கும் அமெரிக்காவோ அல்லதுஏனைய நாடுகளோ ஆதரவு அளிக்கவில்லை என அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தஉறுப்பினர்கள், தமிழீழ போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்தனர் எனஅமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.