ஊர்காவற்துறை – சுருவில் பகுதியில் நேற்று மதியம் படுகொலை செய்யப்பட்ட இளம் கர்ப்பிணி தாய் வீட்டு அறைக்குள் வைத்து வீட்டில் இருந்த கத்தியால் குத்தப்பட்டுள்ளதுடன், அடித்தும் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டிருந்தார்.
அத்தோடு அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் வளையல்கள் ஆகியன களவாடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
மேலும், குறித்த படுகொலை தொடர்பில் மக்கள் தமது முகப்புத்தகத்தில் தற்போது தமது எதிர்ப்பினையும் தமது அனுதாபத்தினையும் தெரிவித்து வருகின்றனர்.
“இவ்வாறு படுகொலை செய்த நபர்களை விசாரணை இன்றி தூக்கில் இட வேண்டும்” ,
“மிகவும் கவலை….. ஊர்காவற்துறையில் இந்த கர்ப்பிணிப் பெண்ணை கும்பிடக் கும்பிட கோடரியால் வெட்டி கொன்ற இனுவில் இளைஞர்களை தாமதம் இல்லாமல் உடன் தூக்கில் தொங்க விட வேண்டும்”,
“வடக்கில் இராணுவம் நிலைகொள்ளும் போது ஒரு பிரச்சினைகளும் வராது என குறிப்பிட்டவர்க்களே..! ஏன் இவ்வாறான சம்பவங்கள் இப்போதும் இடம்பெறுகின்றது”,
“கடந்த காலத்தை விட அதிக சம்பவங்கள் யாழில் அரங்கேறுகின்றன பொலிஸார் நித்திரை கொள்ளுகின்றார்களா?”
இவ்வாறு தமது ஆதங்கத்தினை சமூக வலைத்தளங்களூடாக மக்கள் வெளியிட்டு வருகின்றனர்..
மேலும் நேற்று இடம்பெற்ற குறித்த படுகொலை தொடர்பில் வாய்பேச முடியாத சிறுவனின் உதவியுடன் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கைது செய்யத்தவுடன் அங்கிருந்த மக்கள் அவர்களை தக்க வந்தமையினால் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
கொலை சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்கள், அத்துடன் கைது செய்யபப்ட்ட இரு சந்தேக நபர்களும் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று நீதிமன்றத்தில் குறித்த சந்தேக நபர்களை முன்னிலைப் படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.