நுகர்வோர் அதிகார சபை 90.2 மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு அபராதத் தொகை மூலமே குறித்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஹசித்த குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட 21,819 சோதனை நடவடிக்கைகளின் போதே இந்த வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது.
பொருட்களின் விலைகளை மாற்றி விற்பனை செய்தல்,நுகர்வோர்களை ஏமாற்றுதல்,காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகள் காரணமாகவே அபராத தொகை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது வரவு 22.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு,அபராத தொகை மூலம் பெறப்பட்ட வரவு 67.9 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.