மாரடைப்பால் நின்ற இதய‌ துடிப்பை ‌மீ‌ண்டு‌ம் இய‌ங்க வை‌க்கலாம்! எப்படி தெரியுமா?

நமது உடம்பில் இருக்கும் உறுப்புகளில் ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக இயங்கும் ஒரு உறுப்பு தான் நமது இதயம்.

அப்படி இருக்கும் இதயமானது, நாம் ஓய்வு எடுக்கும் போதும் அல்லது தூங்கும் போதும் மட்டும் தான் இதயத்தின் துடிப்புகள் சற்று குறைவாக காணப்படும்.

இதயதுடிப்பு இல்லாமல் இருக்கும் இதயத்தை இயங்க வைப்பது எப்படி?

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக இதயம் இருக்கும் பகுதியில் லேசான அதிர்வுகளை ஏற்படுத்தி, அவர்களின் வாயின் வழியாக மூச்சினை செலுத்தினால், சில நேரங்களில் உயிரிழந்தவர்களின் இதயத்தை மீண்டும் இயக்க வைக்க முடியும்.

ஆனால், இந்த முதலுதவியின் மூலம் பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்று நிச்சயமாகக் கூறிவிட முடியாது.

மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்தில் ரத்த ஓட்டம் குறைவதால், நமது உடல் குளிர்ந்து விடும். இதனால் தான் இதயத்துடிப்பு நின்று உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

எனவே இது போன்ற நேரங்களில் நமது இதயத்தை மீண்டும் இயங்க வைக்க ஒரு கருவியைக் மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த கருவியானது, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கின் வழியாக செலுத்தி, மூளையில் சிறிய அளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தி நின்ற இதயத்தை மீண்டும் இயங்க வைக்க உதவுகிறது.