என் கட்சியினர் தான் மாணவர்களை தூண்டினார்கள்! புலம்பி தவிக்கும் பன்னீர் செல்வம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஆனால் பதவியேற்றதிலிருந்தே அவரால் சுதந்திரமாக தன் பணியை செய்ய முடியவில்லை என்பதே அவர் நிலையாக உள்ளது.

ஒரு பக்கம் மன்னார்குடி கோஷ்டியின் தலையீடு, மறுபக்கம் அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் ஓ.பி.எஸ்ஐ ராஜினாமா செய்ய சொல்லியும், சசிகலா முதல்வராக வேண்டும் எனவும் வெளிப்படையாகவே பேட்டி கொடுக்கின்றனர்.

இதுபற்றியெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஓ.பி.எஸ் புலம்பி வருகிறாராம்.

தான் முதல்வர் பதவியை விட்டு விலகி வேறு யாராவது முதல்வரானால் , தமிழகம் அசாதாரண சூழலுக்கு தள்ளப்படும் என்பதை அறிந்தே இவர்கள் கொடுக்கும் தொல்லைகளை பொறுத்து கொண்டு முதல்வராக தொடருவதாக ஓ.பி.எஸ் தனது சகாக்களிடம் கூறியுள்ளாராம்.

மேலும், ஜல்லிக்கட்டுகாக மிகவும் கஷ்டப்பட்டு தான் அவசர சட்டம் கொண்டு வந்ததாகவும், தனக்கு நல்ல பெயர் வந்து கூடாது என மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டதை நிறுத்த விடாமல், தன் சொந்த கட்சிகாரர்களே, கட்சி மேலிடம் பேச்சை கேட்டு கொண்டு மாணவர்கள் மற்றும் போராட்காரர்களை கலையவிடாமல் மேலும் தூண்டியதாகவும் ஓ.பி.எஸ் வருத்தத்துடன் தன் நெருங்கிய சகாக்களிடம் தெரிவித்துள்ளாராம்.