2000 ரூபாய் நோட்டு செல்லாது! அதிர்ச்சி தகவல்

500, 1000 ரூபாய் நோட்டுக்கு பதில் புதிதாக புழக்கத்தில் வந்துள்ள 2000 ரூபாய் நோட்டு செல்லாது என மார்ச் 31ம் திகதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அகில இந்திய ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய தாமஸ் பிராங்கோ கூறியதாவது, மத்திய அரசின் இந்த அறிவிப்பால் கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைந்துள்ளனர். சாதராண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணமதிப்பு குறைப்பு நடவடிக்கை பெரும்பாலான பணக்காரர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. 5 மாதத்தில் கார்டு பண பரிவர்த்தனைக்கு சர்வீஸ் சார்ஜ் வங்கிகள் மக்களிடமிருந்து பிடிக்கும்.

தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்வது என்று புரியாமல் சிக்கி தவித்து வருகிறது. எனவே, மார்ச் 31ம் திகதிக்குள் புதிய 2000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.