உங்கள் சிறுநீர் அதிகமாக துர்நாற்றம் அடிக்குதா? அதற்கு என்ன காரணம் தெரியுமா?

ஒருவருடைய அதிகப்படியான சிறுநீர் நாற்றமானது, தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாக்குவதோடு, அது சிலருக்கு மனக்கஷ்டம் தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இது போன்ற சிறுநீர் துர்நாற்ற பிரச்சனையை குணபடுத்துவதற்கு, நமது வீட்டிலே உள்ளது அருமையான தீர்வு!

சிறுநீர் துர்நாற்றம் அடிப்பதற்கு காரணம் என்ன?

ஒருவர் தினமும் உள்ளாடைகள் அணியும் போது, மிகவும் இறுக்கமாக உடுத்தினால் அவர்களின் சிறுநீர் வெளியேற்றப்படும்போது, அதிகப்படியான துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே இறுக்கமான உள்ளாடைகள் அணிவதை தவிர்த்து, அதற்கு பதிலாக காட்டன் துணி உள்ளாடைகளை அணிவது மிகவும் சிறந்தது.

சிறுநீரின் துர்நாற்றத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்து வந்தால், இந்த சிறுநீர் துர்நாற்ற பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
  • நாம் தினமும் சரியாக தண்ணீர் பருகாமல் இருப்பது தான் சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வீசுவதற்கு, முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே நாம் தினமும் நன்றாக தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
  • மோரில் அரைத்த வெங்காயம் மற்றும் இஞ்சியை கலந்து தினமும் இரண்டு வேளைகள் குடித்து வந்தால், சிறுநீரின் துர்நாற்றம் மற்றும் அதன் தொடர்பான அனைத்து பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
  • சிறுநீரின் துர்நாற்றம் அதிகப்படியாக இருந்தால், தினமும் காலையில் குருதிநெல்லி ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
  • தினமும் அதிகமாக மது அருந்தினால் சிறுநீர் கழிக்கும் போது, அதிகப்படியான துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே, இந்த பிரச்சனை உள்ளவர்கள், அதிகமாக மது அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.