குற்றவாளிகளை தப்பிக்க விடமாட்டேன்: மைத்திரியின் அதிரடி!

குற்றவாளிகளுக்கு உயர்ந்த பட்ச தண்டனையை பெற்றுக் கொடுப்பதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிணைமுறி தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒருவரையொருவர் வெறுமனே குற்றஞ்சாட்டிக் கொள்வதாக மட்டுமே இருந்ததுடன் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் உண்மையாக நிறைவேற்றுவதற்கு அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிணைமுறி சம்பவம் தொடர்பான குற்றவாளிகள் யாராகவிருந்தாலும் ஜனாதிபதி என்ற வகையில் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதுடன் மக்களின் நம்பிக்கையுடனேயே தான் எச்சந்தர்ப்பத்திலும் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.