மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன ரணதுங்கவின் மருமகன் அர்ஜுன அலோசியசுக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் ஒருவருடன் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் முன்னர் நாமல் ராஜபக்ஷவுடன் சிறந்த நட்பை பேணியதாகவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அர்ஜுன மகேந்திரனின் மருமகான அர்ஜுன அலோசியஸை கைது செய்யுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாமலும், அலோசியஸும் நண்பர்களே இருவரும் கடந்த ஆட்சிக்காலத்தில் நெருக்கமாக பழகினர்.
8-ம் திகதிக்கு பின்னர் அலோசியஸ் மற்றைய பக்கம் சென்றுவிட்டார். காதலனுக்கு காதலி வேறு ஒருவருடன் சென்றால் கோபம் வரும் தானே.
காதலினால்தானே தாஜுதீன் கொலை சம்பவமும் நடந்தது. அதேபோன்று விரக்தியில் நாமல் இவர் பற்றி இவ்வாறு கூறுகின்றார்.
இப்போது அலோசியசுக்கு அமைச்சரவையில் ஒருவருடன் தொடர்பு உள்ளது.என அவர் தெரிவித்துள்ளார்.