சிறைச்சாலைக்குள் சிக்குண்ட விமல்!

விளக்கமறியலில் இருந்துவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தான் சிறையில் இருக்கும் காலத்தில் எழுதும் முதலாவது நூலின் எழுத்துப் பணிகள் தற்பொழுது நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சம்பந்தமாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் 170 பக்கங்களைக் கொண்டதென, அவரின் நலன் விசாரிக்க சிறைக்குச் சென்ற கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரிடம் விமல் வீரவங்ச கூறியுள்ளார்.

இவர் சிறையில் இருந்தவாறே இரண்டு புத்தகத்தையும் எழுத ஆரம்பித்துள்ளார்.

அவரின் இரண்டாவது புத்தகத்தில் சிறைச்சாலை வாழ்க்கையும், அதன் அனுபவங்களையும் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்குச் சொந்தமான அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள அவர்,

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டிருக்கிறது.

இதேவேளை, கம்பஹா மாவரமண்டிய பிரதேசத்தில் சாதாரண தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த விமல், தற்பொழுது மூன்று மாடி ஆடம்பர மாளிகைக்கு சொந்தக்காரராகவும், பல வர்த்தக நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளவராகவும் இருக்கின்றார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.