ஹம்பாந்தோட்டை வரும் ஜனாதிபதி தமது ஹோட்டலில் தங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பல தடவை மோசடி செய்தது ராஜபக்ஷ குடும்பத்தினர் என்று கூறினார்கள், எனினும் இன்று 100 ஏக்கர் காணியில் நல்லாட்சி அரசாங்கம் டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிக்கின்றார்கள்.
டயர் தொழிற்சாலையின் பழியும் என் மீது வீழுமா? நந்தனவின் அனைத்து சொத்துக்களும் என்னுடையது என்றால், அவருக்கு சொந்தமான டுபாய் ஹோட்டல் நாமலுடைதென்றால், நல்லாட்சி அரசாங்கம் எந்தவொரு டயர் தொழிற்சாலைக்கு வழங்காத நிவாரணங்களை வழங்கி, பிரதமர் ரணில் அடிக்கல் நாட்டிய டயர் தொழிற்சாலையும் எனக்கு சொந்தமானதா என கேள்வி எழுப்பியுள்ளார்.
அன்று கூறியதெல்லாம் பொய்யாகியது. ஹம்பாந்தோட்டை வந்து 15 ஆயிரம் ஏக்கர் காணியை விற்பனை செய்வதற்கு ஒப்பந்தம் செய்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரி ஹம்பாந்தோட்டைக்கு வருகைத்தந்து விடுமுறையை கழிக்கின்றார். எனக்கு சொந்தமானதென கூறப்பட்ட ஷெங்கிலா ஹோட்டலில் மைத்திரி விடுமுறையை கழிக்கின்றார்.
அன்று என்னுடையது என்று கூறினார்கள் இன்று ஷெங்கிலா ஹோட்டலை மைத்திரிபால சிறிசேன திறந்து வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.