மெக்ஸிக்கோ எல்லைச் சுவர் திட்டம்: அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்!

அமெரிக்க ஜனாதிபதியாக பதிவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தனது அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், மெக்ஸிக்கோ,அமெரிக்க எல்லையில் ஒரு சுவர் கட்டுவதற்கான ஆணையில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதற்காக உள்நாட்டு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு சென்ற டிரம்ப் வேலைகளை தொடங்குவதற்கான கோப்புகளில் உத்தரவிட்டார்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவலின் படி தென் பகுதியில் மிகப்பெரிய சுவரை அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த திட்டத்தின் படி அமெரிக்கா – மெக்ஸிக்கோ இடையே 3,200 கிலோமீட்டர் நீளத்திற்கு சுவர் அமைக்கப்பட உள்ளது.
அதேபோல் குடியேற்றம் தொடர்பான இரண்டு ஆணைகளிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். மேலும் வழிபாட்டு நகரங்களுக்கு நிதியை குறைக்கும் கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
இது குறித்து பேசிய டிரம்ப், “எல்லை இல்லா நாடு ஒரு நாடே அல்ல. எல்லை பாதுகாப்பை அமெரிக்கா மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது” என்றார்.