அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும் 7 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக தடை விதிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவில் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பேன் எனவும், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் சுவரை எழுப்புவேன் எனவும் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் முதற்கட்டமாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பணிகளுக்கு டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரைட்டர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் புகலிடம் கோர 7 நாடுகளுக்கு டிரம்ப் தற்காலிகமாக தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘சர்வதேச அளவில் அமெரிக்கா மீது ஒருவித அச்சத்தையும் அதிருப்தி நிலையையும் இந்த உத்தரவு ஏற்படுத்தி விடும்’ என கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.