கட்சியில் இருக்கின்றாரா இல்லையா : அத்துரலியே ரத்ன தேரருக்கு கடிதம் அனுப்பிய ஜாதிக ஹெல உறுமய

கட்சியின் மத்திய செயற்குழுவில் தொடர்ந்தும் இருக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் துரிதமாக தெரியப்படுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கட்சியின் இணைத் தலைவர் ஹெட்டிகல்லே விமலசார தேரர் இதனைக் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தனித்து சுயாதீனமாக இயங்குவதாக இருந்தால், ஹெல உறுமய கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அத்துரலியே ரத்ன தேரர் வாக்குறுதி அளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், அத்துரலியே ரத்ன தேரரின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளும் நோக்கில் இந்த கடித்தை அனுப்பியுள்ளதாகவும் விமலசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.