அதிமுக கட்சி சார்பில் எல்லா வருடமும் ஜனவரி 25ஆம் திகதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் பொருளாளரும், தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் கூறுகையில், தமிழுக்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி தொடங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம் மார்ச் 15-ஆம் திகதி தான் முடிந்தது. தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசை மாணவர்களின் எழுச்சி மிக்க போராட்டம் அப்போது வீழ்த்தியது.
தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் நம் கட்சியில் ஏராளமான பிரச்சனைகள் உருவாகியுள்ளன.
ஆனாலும், அம்மா நம்மை தெய்வமாக இருந்து காத்து கொண்டு இருப்பதால் எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து நாம் வெற்றி கண்டு வருகிறோம் என ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.