இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
* இங்கிலாந்துக்கு எதிராக 9-வது 20 ஓவர் போட்டியில் விளையாடிய இந்திய அணி அதில் சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இந்தியாவை அதிக முறை தோற்கடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து வெற்றுள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்துடன் இந்திய அணி 5 ஆட்டத்தில் தோற்று இருந்தது.
* 20 ஓவர் அணிக்கான கேப்டன்ஷிப்பை தோல்வியுடன் தொடங்கிய முதல் இந்திய கேப்டன் விராட் கோலி தான். இந்திய அணிக்கு டோனி முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட ஆட்டத்தில் முடிவு கிடைக்கவில்லை. இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை வகித்த ஷேவாக், ரஹானே, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை தேடித்தந்திருக்கிறார்கள்.