நன்றாக பழுத்து கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் கெட்டு போய்விட்டது என்று நினைத்து நம்மில் பலர் அதை தூக்கி எறிந்து விடுவார்கள்.
ஆனால் கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் தான் ஏராளமான மருத்துவ நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்
- கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் டிரிப்டோபென், செரோடோனினாக மாற்றப்பட்டு இருக்கும். எனவே இந்த வாழைப்பழம் நீண்ட நாள்பட்ட மன அழுத்தம் பிரச்சனையை குறைக்கிறது.
- வாழைப்பழத்தில் ஃபுருக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் என மூன்றின் கலவையும் அதிகமாக இருக்கிறது. எனவே இது நமது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளித்து, உடலில் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது.
- தினமும் கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால், அது நமது மூளைக்கு தேவையான அளவு சக்தியை அளித்து, மூளையின் செயல்திறனை சீராக்குகிறது.
- நாம் தினமும் காபி குடிக்கும் பழக்கத்தை தவிர்த்து விட்டு, அதற்கு பதிலாக ஒரு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது நமது உடல் மற்றும் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவுகிறது.
- தினமும் இரண்டு கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிடுவதால், குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையை சீராக்கி, இதய நலனை மேம்படுத்துகிறது.
- கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழத்தில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், அது நமது உடலின் ஒட்டுமொத்த நலனை ஊக்குவித்து, ரத்த சுழற்சி மற்றும் எலும்புகளின் வலிமையை அதிகப்படுத்துகிறது.
- வாழைப்பழத்தில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நமது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய நோய், புற்றுநோய் மற்றும் தசை கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.