கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தோனேஷியப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே குறித்த பிரஜை இன்று காலை உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் சவூதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியா நோக்கிச் சென்ற 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
சவூதியிலிருந்து வருகைத்தந்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தோனேஷியா செல்லும் விமானத்திற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இந்தோனேஷியப் பிரஜையின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்