பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு மஹிந்த கோரிக்கை!!

மத்திய வங்கி முறி விநியோகம் தொடர்பில் கோப் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்ட விடயம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர் கல்வி துறை தொடர்பிலும் பிமல் ரத்நாயக்க இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார். இதன் போது கேள்வி எழுப்பிய தினேஸ் குணவர்தன,

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்மை தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே நேரம் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.