முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் போன்று இளைஞர்கள் வீதியில் சுட்டுக்கொல்லப்படவில்லை என மின்வலு எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
மஹிந்த ஆட்சிக் காலத்தில் போன்று இளைஞர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வீதியில் அவர்களது சடலங்கள் போடப்படவில்லை.
மஹிந்த காலத்தைப் போன்று அரசியல்வாதிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்வது கிடையாது.
பொதுச் சட்டங்களை மீறும், நீதிமன்ற உத்தரவினை மீறும் அனைவருக்கு எதிராகவும் தற்போது நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.
நீதிமன்றினால் ஒர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதனை எதிர்நோக்கி தாம் குற்றமற்றவர் என்பதனை நிரூபிப்பதே பொருத்தமானதாக அமையும்.
மாறாக உத்தரவிற்கு எதிராக சவால் விடுப்பது பொருத்தமானதாக அமையாது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளா் லஹிரு வீரசேகர நீதிமன்ற உத்தரவினை மீறிச் செயற்பட்டதனால் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரதி அமைச்சர் அஜித் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.