தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற எண்ணியிருந்த போதும் மைத்திரிபாலவே தன்மை மீண்டும் ஆட்சிக்கு இழுக்க காரணமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியில் காணப்படும் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தான் நிறுத்தச் செய்வேன் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நுகேகொட நகரில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருப்பேன் ஆனால் என்னை மீண்டும் இழுக்க மைத்திரிபால சிறிசேனவே காரணம்.
நான் ஒருபோதும் நாட்டுக்கு பாதிப்பான அரசியலமைப்பை செய்ய விட மாட்டேன். தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்தே காட்டுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.