இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிகச் சிறந்த இடத்தை பிடிப்பார் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சியை தாமே தோற்கடிக்கச் செய்த மிக அற்புதமாக அரச தலைவர் என்ற பெயரை பெற்று விடுவார் என அவர் குறிப்பிட்டார்.
இதன்காரணமாக, அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ யுகத்தை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும் என ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ஒருசிலர் தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கையை ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்தார்.